சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா 1-29

ஒத்த நூற்பாக்கள்:
 


 
‘தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியல் போர்வேற்கண்- பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்’

‘மூச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே’

‘நீர்கொண்ட சென்னி மயேச்சுரன் பாணினி நீள்கடல்சூழ்
பார்கொண்ட கீர்த்தி வரருசி ஞான பதஞ்சலிபூந்
தார்கொண்ட வானவர் கோன்பா ரதியிவர் தாள்வணங்கி
ஏர்கொண்ட சொற்பிர யோக விவேகம் இயம்புவனே

முச்சயத் தொழிற்கொடு முச்சகம் தனித்தாள்
அச்சயன் அடிபணிந்து அறைகுசொல் விளக்கே.

‘உருபமும் அருபமும் உருபரு பமுமுளன்
இலன்எவன் அவற்றொழுது இயம்புவன் சொல்லே.
 



நே.சொல். 1


நன். 258




பி.வி. 1


தொ.வி. 41


மு.வி.பெ. 1

சொற்குப் பொதுவிலக்கணம்
 

160தனிமொழி தொடர்மொழி எனஇரு வகைத்தாய்
இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்
மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே.