இதுமேல் தொகைப்படுத்து உரைத்த பெயர்களைவகைப்படுத்து உரைக்கின்றது. இ-ள்: ஆண்மை முதலிய நால்வகையானே மேற் கூறிய முதற்பெயர் முதலிய மூன்றும் ஒவ்வொன்று அங்ஙனம் கூறிய நான்காதல் தன்மையைப் பொருந்தும்; ஆணும் பெண்ணும் ஆகிய இரண்டு வகையானே முறைப்பெயர் இரண்டு ஆதல்தன்மையைப் பொருந்தும் என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு. வரலாறு: ஆண்மை முதற்பெயர் பெண்மைமுதற் பெயர் ஒருமை முதற்பெயர் பன்மை முதற்பெயர் எனவும், ஆண்மைச்சினைப்பெயர் பெண்மைச்சினைப்பெயர் ஒரு மைச்சினைப்பெயர் பன்மைச்சினைப்பெயர் எனவும், ஆண்மைச்சினைமுதற்பெயர் பெண்மைச்சினைமுதற்பெயர் ஒரு மைச்சினைமுதற்பெயர் பன்மைச்சினைமுதற்பெயர் எனவும், ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் எனவும் வரும். |