சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

96 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

மேல் என்றது சென்ற நூற்பாவினை,
                    தொகைப்படுத்துதல் - இயற்பெயர் சினைப்பெயர்
                    சினைமுதற்பெயர் முறைப்பெயர் என்று பகுத்துக்கொண்டமை.

வகைப்படுத்துதல் - முதற்பெயர் நான்கு, சினைப் பெயர் நான்கு,
சினைமுதற்பெயர் நான்கு, முறை இரண்டு என்று கூறி விளக்கியமை.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘அவற்றுள்
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கு என மொழமனார் சினைமுதல் பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மரபின’.

‘அவைதாம்
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று
அந்நான்கு என்ப இயற்பெயர் நிலையே.’

‘பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர்என்று
அந்நான்கு என்ப சினைப்பெயர் நிலையே.’

‘பென்மை சுட்டிய சினைமுதல் பெயரே
ஆன்மை சுட்டிய சினைமுதல் பெயரே
பன்மை சுட்டிய சினைமுதல் பெயரே
ஒருமை சுட்டிய சினைமுதல் பெயர் என்று
அந்நான்கு என்ப சினைமுதல் பெயரே’.
தொல்.சொல்.175




176



177





178