சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-26, 2797

  ‘பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர்
ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே.’
தொல்.சொல். 179
 
  ‘ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆம்அந் நான்மைகள் ஆண்பெண் முறைப்பெயர்.’
நன். 283
 
  ‘அவற்றுள்
சினைப்பெயர் நான்கே சினைமுதற் பெயர் ஒரு
நான்கே இயற்பெயர் நான்கே முறைப்பெயர்
ஓரிரண்டு என்மனார் உணர்த்திசி னோரே.’
மு.வீ.பெ. 28
 
  ‘ஆண்மைச் சினைப்பெயர் பெண்மைச் சினைப்பெயர்
ஒருமைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர்
அந்நான்கு என்ப சினைப்பெயர்க் கிளவி.’
29
 
  ‘ஆண்மை இயற்பெயர் பெண்மை இயற்பெயர்
ஒருமை இயற்பெயர் பன்மை இயற்பெயர்
அந்நான்கு ஆகும் இயற்பெயர் மொழியே.’
30
 
  ‘ஆண்மைச் சினைமுதல் பெண்மைச் சினைமுதல்
ஒருமைச் சினைமுதல் பன்மைச்சினைமுதல்
என நான்கு ஆகும் சினைமுதல் கிளவி’,
31
 
  ‘ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர்
என இரு திறத்தவாம் முறைப்பெயர்க் கிளவி.’
32


அவை பாலுணர்த்துமாறு
 

185 அவற்றுள்
ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும்
பன்மை சுட்டிய பெயர் அலங் கடையே.