நூல் விளக்கம்
|
பெயரியல் |
எண் சூத்திர எண் |
159. | பார்வதியை மணந்து உலகினைக்காக்கும் சிவபெருமானுடைய திருவடிகளைப்பணிந்து சொல்பற்றிக் கூறுவேன் என்பது |
1 |
160. | சொல்லாவது தனிமொழி தொடர்மொழி எனஇருவகைப்பட்டு, இருதிணை ஐம்பாற் பொருளையும் தன்னையும், மூவகையிடத்தும், வழக்கின்கண்ணும் செய்யுட்கண்ணும், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தெரிவிக்கும் என்பது |
2 |
161. | தனிமொழி சமயஆற்றலால் பொருள் விளக்கும்;தொடர்மொழி அவாய்நிலை- தகுதி- அண்மைநிலை- இவற்றால் தொகைநிலையாகவும் தொகாநிலையாகவும் பொருளை விளக்கும் என்பது |
3 |
162. | மக்கள் என்று நன்கு மதிக்கப்படும் பொருள்உயர்திணை, மக்களல்லாப் பிற பொருள் அஃறிணை என்பது |
4 |
163. | உயர்திணை, ஆண் பெண் பலர் என மூன்றுபகுப்புக்களை உடையது என்பது |
5 |
164. | அஃறிணை, ஒன்று பல என இரு பகுப்புக்களைஉடைத்து என்பது |
6 |
165. | தெய்வமும் பேடும் தமக்கெனத் தனிப்பட்ட ஈறுஉடையன அல்ல; அவை உயர்திணைக்குரியஆண் பெண் பலர்பால் ஈற்றவாய் உயர்திணையாகும் என்பது |
7 |