பக்கம் எண் :

நூலமைப்பு17

174.

செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு கொடுந்தமிழ்நாட்டின்கண்ணும்,
பதினெண்நிலங்களுள்தமிழ் ஒழிந்த மற்றைப் பதினேழ் மொழி பேசும்
நிலங்களின்கண்ணும் வழங்குஞ் சொல் தமிழ்மொழியில் கலந்துவரின்
திசைச்சொல்லாம் என்பது

16

175.

தமிழ் ஆரியம் என்ற இரண்டற்குரிய பொதுவெழுத்தானும்
ஆரியத்திற்கேஉரிய சிறப்பெழுத்தானும், பொதுசிறப்பு என்ற ஈரெழுத்தானும்,
ஆக்கப்பட்டுத் தமிழியல்புக்கு ஏற்பத் திரிந்துவருவன வடசொல் என்பது

17

176.

இடுகுறி - காரணம் - மரபு - ஆக்கம் பற்றி,வினையால் அணையும் பெயர் அல்லாதன காலங்காட்டாவாய், வேற்றுமை ஏற்றற்கு இடனாய்,திணைபால் இடங்களில் ஒன்றனை ஏற்பனவும்பொதுவுமாகிப் பொருளைப்
புலப்படுப்பனவேபெயர்ச்சொல் என்பது

18

177.

கிளைமுதலிய பொருள் - திணை முதலிய இடம்-யாண்டு முதலியகாலம் -தோள் முதலிய சினை-அளவு முதலிய பண்பு - ஓதல் முதலிய தொழில்-
ஆகிய இவற்றைப்பற்றியும், சுட்டு - வினா-பிற-மற்று என்பன பற்றியும் வரும்
னகரஈற்றுச்சொற்களும், நம்பி - ஆடூஉ- விடலை -கோ-வேள்- குரிசில்-
தோன்றல் முதலிய சொற்களும் ஆண்பாற்பெயர் என்பது

19

178.

முற்குறித்தவற்றைப் பற்றி வரும் ளகரஈற்றுச்சொற்களும், இகரஈற்றுச்
சொற்களும், தோழி -செவிலி- மகடூஉ - நங்கை - தையல் முதலிய
சொற்களும் பெண்பாற்பெயர் என்பது

20