பக்கம் எண் :

18 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

179.

முற்குறித்தவற்றைப் பற்றி வரும் ரகரஈற்றுச்சொற்களும், கள்ஈறு விகுதிமேல்
விகுதியாகஅடுத்து வருவனவும், விகுதியாகவே அடுத்துவருவனவும் பலர்பாற்
பெயர் என்பது

21

180.

எது ஏது யாது என்ற வினா, அது இது உதுஅஃது இஃது உஃது என்ற சுட்டு, இவற்றைஅடுத்து வரும் இத்துவ்வீற்றுச் சொற்களும்,பொருள்முதல் ஆறும் தொடர்ந்து வரும் துவ்வீற்றுச் சொற்களும், ஒன்று என்ற எண்ணும்போல்வன ஒன்றன்பாற் பெயர் என்பது

22

181.

பொருளாதி ஆறும் பற்றி வரும் வகர ஐகார ஈற்றுச்சொற்களும்
அகரஈற்றுச்சொற்களும், கள்ஈறுபெற்ற அஃறிணைச் சொற்களும், அவ் இவ் உவ்என்ற சொற்களும், ஒன்று அல்லாத எண்ணுப்பெயர்களும், உள்ள -
இல்ல - பல்ல - சில்ல-உள- இல - பல - சில முதலிய சொற்களும் பல
வின்பாற் சொற்களாம் என்பது

23

182.

பால்பகா அஃறிணைப்பெயர்கள் ஒருமை பன்மைஇரண்டற்கும் பொதுவாம்
என்பது

24

183.

முதற்பெயர் நான்கு, சினைப்பெயர் நான்கு, சினைமுதற்பெயர் நான்கு, முறை
இரண்டு, தன்மைநான்கு, முன்னிலை ஐந்து, எல்லாம் - தாம் -தான்முதலியன
பொதுப்பெயர்களாம் என்பது

25

184.

முதற்பெயர் முதலிய மூன்றும் ஆண்மைபெண்மை ஒருமை பன்மை என
நான்கு வகைப்படும்; முறைப்பெயர் ஆண் பெண் என இருவகைப்படும்
என்பது

26