185. | பன்மை சுட்டிய முதற்பெயர், பன்மைசுட்டியசினைப்பெயர், பன்மைசுட்டிய சினைமுதற்பெயர்என்ற மூவகைப்பட்ட பன்மைசுட்டிய பெயர்நீங்கலான ஏனைய பதினொன்றும் இருதிணைக்கண்ணும் தத்தமக்குரிய ஆண்மை, பெண்மை,ஒருமைப் பால்களை ஏற்கும் என்பது |
27 |
186. | பன்மைசுட்டிய பெயர் மூன்றும் அஃறிணை ஒருமையையும் அத்திணைப் பன்மையையும் உயர்திணைஆண் ஒருமையையும் உயர்திணைப் பெண் ஒருமையையும் சுட்டும் என்பது |
28 |
187. | தன்மை யான் - நான் - யாம் - நாம் என்றநான்கு; முன்னிலை எல்லீரும் - நீயிர் - நீவிர் -நீர் - நீ என்ற ஐந்து; ஏனைய படர்க்கை; எல்லாம் என்பது மூன்று இடத்திற்கும் பொதுவானபெயர் என்பது |
29 |
188. | தொழிற்பெயர் படர்க்கைஇடத்திற்கே உரித்து;வினையால் அணையும் பெயர் தனித்தனி மூன்றுஇடங்களுக்கும் உரிமை பூண்டு வரும் என்பது |
30 |
189. | தான்-யான்-நான் - நீ என்பன ஒருமை; தாம்-யாம்-நாம்-எல்லாம்-எல்லீர் - நீயிர் - நீர்-நீவிர்என்பன பன்மை என்பது |
31 |
190. | ஒருமையைப் பகுதியாகக் கொண்ட ஒருவன்ஒருத்தி என்ற சொற்களே உண்டு; இருவன்இருத்தி முதலிய சொற்கள் இல்லை என்பது. |
32 |
191. | ஒருவர் என்பது ஆண்பால் பெண்பாலுக்குப்பொதுச் சொல்லாய் விகுதிப்பற்றிப் பன்மைகொண்டு முடியும் என்பதும், ஆர்ஈற்றுப்பெயர்கள் பன்மைவினைகொண்டு முடியும் என்பதும்இறைச்சி பொருள்வயின் வரும் பெயர்கள் ஈறுபற்றி உயர்திணை உணர்த்தாது அஃறிணைப் |