| பெயர்களேயாம், அவற்றுள் திணையொடு பழகியபெயர்கள் உயர்திணையைஉணர்த்தும் என்பதும்எல்லாம் என்பது படர்க்கைப்பன்மைக்கண்ணும்வரும் என்பதும் பெண்மகன் என்பது பொருள் பற்றி மகடூஉவினை கொள்ளும் என்பதும்முதலாயின |
33 |
192. | ஆகுபெயர் பொருள் இடம் காலம் சினை குணம்தொழில் அளவை சொல் தானி கருவி காரியம்கருத்தன் முதலிய பொருண்மைக்கண் ஒருபெயர் அதனோடியைபுடைய பிறிதொரு பெயரைத்தொன்று தொட்டு உணர்த்தி வருவதாம் என்பதும், அது தத்தம் பொருள்வயின் தம்மொடூசிவணும் ஆகுபெயர் - ஒப்பில்வழியால் பிறிதுபொருள் கட்டும் ஆகுபெயர் என இருவகைத்துஎன்பதும், எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆகாதுஎன்பதும், போல்வன |
34 |
193. | பெயர்க்கு ஈறாய் நின்று பெயர்ப் பொருளைவேற்றுமை செய்வனவாகிய வேற்றுமை ஏழுஎன்று ஒரு சாரார் கூறுவர்; படர்க்கையோரை முன்னிலையாக்கும் விளியொடு தலைப்பெய்யவேற்றுமை எட்டாம் என்பது |
35 |
194. | பெயர் -ஐ-ஆல்-கு- இன்-அது-கண்-விளி எனபன வேற்றுமைகளின் பெயர்முறை என்பது |
36 |
195. | வேற்றுமை உருபுகளை ஆறாம்வேற்றுமை உருபும் ஏற்கும் என்னபது |
37 |
196. | நீயிர்-நீவிர்-நான் என்பன என்றும் எழுவாய்வேற்றுமையாகவே இருக்கும் என்பது |
38 |
197. | எழுவாய் வேற்றுமை பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் என்பதும், அது வினைபெயர் வினாஎன்பனவற்றைக்கொண்டு முடியும் என்பதும், |