பக்கம் எண் :

22 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 

களினும், பொருள் - இடம் - காலம் என்றபிறிதின்கிழமைப் பொருள்களினும்,
இயற்கைமுதலிய முடிக்குஞ் சொற்கொண்டு முடியும்என்பது

45

204.

ஏழம் வேற்றுமை உருபு கண் என்பது; அதுவினை செய்இடம் - நிலம் -
காலம் என்றபொருள்களில் வரும்; அதன்கண் உருபின்பொருள்பட வருவன
கண் - கால் - முதலியனவாம் என்பது

46

205.

எட்டாம் வேற்றுமையாவது படர்க்கையோரைமுன்னிலை யாக்குவதாம்; அதன்
உருபு பெயர்ஈறுதிரிதலும், குன்றலும், மிகுதலும், இயல்பும்,ஈற்றயல்
திரிதலுமாம் என்பது

47

206.

உயிர் ஈற்றுள் இ - உ - ஊ - ஐ - ஓ என்பனவும், புள்ளியீற்றுள் ன - ள -
ர - ல - ய என்பனவும் உயர்திணைப் பெயர்களுள் விளியேற்கும்;
இவ்வீறுகளுள் ஓ - ர - அல்லனவாகியஎட்டீற்றுடன் னகாரமும் ஆகாரமும்
கூட்டப்பத்து ஈறுகள் விரவுப் பெயர்களுள் விளியேற்கும்;அஃறிணையில்
எல்லா ஈறுகளும் விளியேற்கும்;இவற்றை உலகவழக்கும் செய்யுள் வழக்கும்
பற்றிக் கொள்க என்பது

48

207.

உயர்திணை விரவு அஃறிணைப் பெயர்கள் பொதுவாக இயல்பாகவும், ஏகாரம்
பெற்றும், இகரம்நீண்டும் விளியேற்கும் என்பது

49

208.

மூவகைப் பெயர்க்கண்ணும் ஐகாரம்ஆயாகவும்பொதுப்பெயர்க்கண் ஐகாரம்
ஆவாகவும்திரிந்துவிளியேற்கும் என்பது.

50