பக்கம் எண் :

நூலமைப்பு23

209.

ஒரு சார் னகர ஈற்று உயர்திணைப் பெயர்கள்அளபு, ஈறழிவு, அயல்நீட்சி,
அதனொடு ஈறுபோதல், அவற்றொடு ‘ஓ’ உறல், ஈறு அழிந்து‘ஓ’ உறல்,
இறுதி ‘ய’ ஆதல், அதனொடு அயல்திரிந்து ‘ஏ’ உறல், ஈறு அழிந்து அயல் ‘ஏ’ யாதல் என்ற திரிபுகள் பெற்று விளியேற்கும்என்பது

51

210.

ளகார ஈற்று உயர்திணைப் பெயர்கள் அளவு,அயல் நீட்சி, ளகரம் யகரமாதல்,
ஈற்றயல்அகரம்ஏகாரம் ஆதல் என்ற திரிபுபெற்று விளியேற்கும்என்பது

52

211.

ரகர ஈற்ற உயர்திணைப்பெயர்கள் அளபு, ஈற்றுஅயல் அகரம் இஈ ஆதல்,
ஈற்று அயல் ஆகாரம்‘ஈ’ ஆதல், அதனோடு ‘ஏ’ உறல், ஈற்று ‘ஏ ’ மிக்கு
அயல் ‘யா’ கெட்டு அதன் அயல் நீடல், ஈற்றில்‘ஓ’ உறல் முதலிய திரிபு
பெற்று விளியேற்கும்என்பது

53

212.

லகர ஈற்று உயர்திணைப்பெயர் அயல் நீண்டும்,யகர ஈற்று உயர்திணைப்
பெயர் அளபெடுத்தும்விளி ஏற்கும் என்பது

54

213.

னகர ஈற்று அஃறிணைப்பெயரும் விரவுப்பெயரும்இறுதி அழிந்து அயல்
நீண்டு விளியேற்கும்என்பது

55

214.

ளகர ஈற்று அஃறிணைப் பெயரும் பொதுப்பெயரும் ஈற்றயல் நீட்சி பெற்றும்
விளியேற்கும்என்பது

56

215.

அன்மைவிளி இயல்பாகவும் ஈறு அழிந்தும்தோன்றும்; சேய்மைவிளி
அளபெடுத்தலைப்பொருந்தும்; புலம்பல்விளி ஓகாரம் பெற்றுத்
தோன்றும் என்பது
 

57