224. | ஐந்தாம் வேற்றுமையில் எல்லைப் பொருண்மைக்கண் உருபு ஏற்ற சொல்லும், ஆறாம் வேற்றுமைஉருபு ஏற்ற சொல்லும் பெயர்கொண்டு முடியும்; ஏனையவை வினை கொண்டு முடியும்; நான்காம்வேற்றுமை உருபு ஏற்ற சொல்லும், ஏழாம்வேற்றுமை உருபு ஏற்ற சொல்லும் பெயர்வினை இரண்டனையும் கொண்டு முடியும் என்பது | 66 | 225. | வேற்றுமைப் பொருளை விரிக்குங்கால், அன்மொழித்தொகையை விரிபபதுபோல இடையேதொக்க உருபும் பொருளும் வேண்டியவாறு விரித்துப் பொருள் கொள்க என்பது | 67 | 226. | தொழில் தோன்றுவதற்குரிய காரணங்களாகியவினை, செய்வது, செயப்படுபொருள், நிலன்,காலம், கருவி, இன்னதற்கு, இது பயன் என்ற எட்டனுள் வழக்கிடத்துச் சில குன்றியும் வரும்என்பது | 68 | வினையியல் | 227. | வினைச் சொல்லாவது வேற்றுமை உருபு ஏலாதுகாலத்தை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டிப் பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும் என்பது | 1 | 228. | முன் கூறப்பட்ட நட - வா முதலிய பகுதிகளைக்கொண்டு வினைச் சொற்கள் தோன்றும்என்பது | 2 | 229. | வினைச்சொல் சிறப்புவினை - பொதுவினை -என்ற இருவகைத்தாம் என்பதும், முற்று -பெயரெச்சம் - வினையெச்சம் என மூவகைப்படும்என்பதும் | 3 |
|
|
|