பக்கம் எண் :

26 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

230.

பிறிதொரு சொல்லை ஏற்காது தாமே தொடராதற்கு உரிய ஆற்றலுடைய
வினைச்சொற்கள்வினைமுற்றுக்களாம்; அவை பெயரொடு முடியும்என்பது

4

231.

ஆண்- பெண்- பலர் - ஒன்று - பல- தன்மைஒருமை, தன்மைப் பன்மை, முன்னிலை ஒருமை,முன்னிலைப்பன்மை என்ற ஒன்பானையும் இறப்பு
- நிகழ்வு - எதிர்வு - என்ற முக்காலத்தொடும்முரண வினைமுற்றுச்சொல் இருபத்தேழு வகைப்படும் என்பது

5

232.

ஆண்பால் விகுதி அன் ஆன்; பெண்பால் விகுதிஅள் ஆள்; பலர்பால்
விகுதி அர் ஆர் ப மார்;இவற்றுள் மார் வினையொடு முடியும் என்பது

6

233.

யார் என்ற குறிப்பு வினை உயர்திணை முப்பாற்கும் உரித்து என்பதும்,
இக்காலத்து அதுஇருதிணைப் பொதுவினையாயிற்று என்பதும்

7

234.

து - று - டு என்பன ஒன்றன்பால் விகுதி; அ-ஆ என்பன பலவின்பால்
விகுதி; டுவ்விகுதிகுறிப்பிற்கும், ஆகார விகுதி எதிர்மறைக்குமேவரும்
என்பது

8

235.

எவன் என்ற குறிப்புவினை அ ஃறிணை இருபாற்கும் உரித்து என்பது

9

236.

தன்மை, முன்னிலை, வியங்கோள், இல்லை, இல்,வேறு, உண்டு, பெயரெச்சம்,
வினையெச்சம் என்பன ஒருகால் உயர்திணையையும் ஒருகால் அஃறிணையையும் குறிக்கும் பொதுவினைகளாம் என்பது

10