பக்கம் எண் :

நூலமைப்பு27

237.

கு - டு - து - று - அல் - அன் - என் - ஏன் என்பனதன்மை ஒருமை விகுதி; தன்மைப் பன்மைவிகுதிகளில் அம்-ஆம் என்பன முன்நின்றாரையும், எம்-ஏம்-ஓம் என்பன படர்க்கையாரையும், கும்-டும்-தும்-றும் என்பன இருபாலாரையும் உளப்படுப்பனவாம்; செய்கு என்றதன்மை ஒருமை
வினைமுற்றும், செய்கும் என்றபன்மை வினைமுற்றும் வினைகொண்டு
முடியினும் முற்றாம் இயல்பில் திரியா என்பது

11

238.

ஐ-ஆய்-இ என்ற விகுதிகள் பெற்ற சொற்களும்,எல்லா ஈற்று ஏவல் வினைகளும், அல்-ஆல்-ஏல்-காண் என்ற விகுதிகள் பெற்ற சொற்களும்
ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் என்றமூன்று பால்களுக்கும் பொதுவாகிய
முன்னிலைஒருமை வினைமுற்றுச் சொற்களாம்; இர்-ஈர்என்ற விகுதி பெற்ற சொற்கள் முன்னிலைப்பன்மை வினைமுற்றுக்களாம்; மின்விகுதி பெற்ற
சொற்கள் பன்மை ஏவல் வினை முற்றுக்களாம்என்பது.

12

239.

க, ய, ர், ஆல், அல், உம், மார், ஐ என்ற எட்டுவிகுதிகளும் வியங்கோள் வினை முற்றுப்பெறும்;அது இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்குப்பொதுவான
வினை முற்றாகும் என்பது.

13

240.

வேறு, இல்லை, இல், உண்டு என்பன இருதிணைமூவிடங்களுக்கு உரிய
குறிப்புவினை முற்றுக்களாம் என்பது

14

241.

செய்யும் என்னும் முற்றுத் தன்மைக்கண்ணும்முன்னிலைக்கண்ணும் வாராது; படர்க்கையினும்பலர்பாலில் வாராது; ஆண் பெண் ஒன்று பலஎன்ற
நாற்பால்களிலேயே வரும் என்பது

15