பக்கம் எண் :

28 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

242.

பெயரெச்சம் பிறிது ஒரு பெயர் சார்ந்தும் வினையெச்சம் பிறிது ஒரு வினை சார்ந்தும் பொருள்முற்றுப் பெறும் குறைச் சொற்களாகி, இருதிணை
ஐம்பால் மூவிடங்களுக்கும் வரும் பொது வினையாம் என்பது

16

243.

மூன்று காலங்களுக்கும் உரிய செய்த - செய்கின்ற - செய்யும் - என்னும்
வாய்பாட்டினைஉடையதாய், பொருட்பெயர் முதலிய அறுவகைப்
பெயருங்கொண்டு முடிந்து பொருள்முற்றும் இயல்பிற்றுப் பெயரெச்சம்
என்பதும்,எதிர்மறைப் பெயரெச்சமும் குறிப்புப் பெயரெச்சமும் உள என்பதும்

17

244.

செய்யும் என்னும் பெயரெச்சத்து ஈற்றயல் எழுத்தாகிய உயிர் மெய் கெடுதலும், உம் ஈறு உந்துஈறு ஆதலும், செய்யும் என்னும் வினை முற்றின்ஈற்றயலில் உள்ள உயிரும் உயிர் மெய்யும் கெடுதலும் செய்யுளகத்து உண்டு என்பது

18

245.

செய்து செய்யூ முதலிய வாய்ப்பாட்டான்அமைந்து தன்வினை பிறவினை
என்னும் இருதிறத்து வினைகளையும் கொண்டு முடிந்து வினையெச்சம் பொருள் நிரம்பும் என்பது

19

246.

செய்து - செய்யூ- செய்யா - செய்பு - செய்தென - என்ற ஐந்து
வாய்பாடுகளும் இறந்தகால வினையெச்ச வாய்பாடுகள்; செய என்பது
நிகழ்கால வினையெச்ச வாய்பாடு; செயின்-செய்யிய- செய்யியர்- வான்- பான்- பாக்குஎன்ற ஆறும் எதிர்கால வினையெச்ச வாய்பாடுகள்; இவையன்றிக் கு, பின், முன், கால், கடை,வழி, இடத்து, இன்றி, அன்றி, அல்லது, அல்லால்,
ஏல், ஏன், ஆயினும், ஆனும், முதலியனவும் தெரிநிலை குறிப்பு வினையெச்ச
வாய்பாடுகளாய் வரும் என்பது

20