247. | முன்னர்க்கூறிய வினையெச்ச வாய்பாடு பன்னிரண்டனுள் செய்து - செய்யூ- செய்யா-செய்பு என்ற நான்கும் தம்வினைமுதல்வினையே கொள்ளும்; வான் பான் பாக்கு என்றமூன்றும் அந்நிலையனவே; ஏனையவை தம்வினை முதல்வினையும் பிறவினைமுதல் வினையும் கொள்ளும் என்பது |
21 |
248. | சினைவினை சினைவினை கொண்டு முடிதலேயன்றி, முதல்வினையும் கொண்டு முடியும், முதல்வினையும் தன்வினைமுதல்வினை கொண்டு முடிதலேயன்றிப் பிறவினைமுதல்வினையும் கொண்டுமுடியும் என்பது |
22 |
249. | வினையெச்சம் தெரிநிலைவினையும் குறிப்பு வினையும் கொண்டு பொருள் முற்றுப்பெறும்; அந்நிலையில் குறிப்பு வினை ஆக்கச் சொல் பெற்று வரும் என்பது |
23 |
250. | தெரிநிலை வினைமுற்று வினையெச்சப் பொருட்டாய் வருதலும், குறிப்புவினைமுற்று வினையெச்சப் பொருட்டாயும் பெயரெச்சப் பொருட்டாயும் வருதலும் உண்டு என்பது |
24 |
இடைச்சொல்லியல்
|
251. | தமக்கென ஒரு பொருள் இன்றிப் பெயரையும்வினையையும் சார்ந்து நின்றே, வேற்றுமை -வினை-சாரியை-உவமை உருபுகளாகவும், தத்தம்பொருளவாகவும், இசைநிறையாகவும், அசை |