| | நிலையாகவும் எழுவகையான் ஒன்றும் பலவுமாக வந்து பொருந்துவன இடைச்சொற்களாம்என்பதும், இடைச்சொல் முன்னும் பின்னும்நிற்குமேனும் இடைநிற்றலே பெரும்பான்மையாதலின் இடைச்சொல் எனப்பட்டன என்பதும |
1 |
252. | ஏகார இடைச்சொல் தேற்றம்-வினா- எண்-பிரிநிலை-எதிர்மறை-ஈற்றசை-என்ற ஆறு பொருளில் வரும் என்பது |
2 |
253. | ஓகார இடைச்சொல் ஒழியிசை - வினா - சிறப்பு -எதிர்மறை - தெரிநிலை - கழிவு - பிரிப்பு - அசைநிலைஎன்ற எட்டுப்பொருளில் வரும் என்பது |
3 |
254. | தெளிவுப்பொருளில் வரும் ஏகார இடைச்சொல்லும், சிறப்புப்பொருளில் வரும் ஓகார இடைச்சொல்லும் அளபெடுக்கும் என்பது |
4 |
255. | என என்னும் இடைச்சொல்லும் என்று என்னும்இடைச்சொல்லும் வினை-பெயர்- குறிப்பு-இசை-எண்-பண்பு என்ற ஆறு பொருளில் வரும் என்பது |
5 |
256. | உம்மை இடைச்சொல் எதிர்மறை-சிறப்பு-எண்-எச்சம்-முற்று-ஐயம்- தெரிநிலை-ஆக்கம் என்றஎட்டுப்பொருளில் வரும் என்பது |
6 |
257. | முற்றும்மை எதிர்மறை வினைச் சொற் கொண்டுமுடியும்வழியே பெரும்பாலும் எச்சஉம்மையுமாம் என்பது |
7 |
258. | உம்மையடுத்த சொற்றொடர்க்கு முடிக்குந்தொடர் செஞ்சொல்லாயின், அதனை முடிக்கப்படுவதாகக் கொண்டு முற்படக்கிளக்க என்பது |
| | 8 |