பக்கம் எண் :

36 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 அறிதற்கு ஓதியவழிகளைச்சேராமல் கடைப்பிடித்துப் பாதுகாவலாகிய
ஆணையின் கிளந்தவற்று இயலானே அவற்றையும் பகுதியுற உணர்க
என்பதனால், உரு-உட்கு; புரை-உயர்வு, குற்றம்; மல்லல்- வளன்; ஏ-
பெருக்கம்; உகப்பு- உயர்தல்; உவப்பு- உவகை; பயப்பு-பயன்; இயைபு-
கூட்டம்; சீர்த்தி- மிகுபுகழ்; மாலை- இயல்பு; தீர்தல்- விடல்; பழுது-
பயமின்மை; முழுது- எஞ்சாமை; வம்பு- நிலையின்மை; மாதர்-காதல்; புலம்பல்-
தனிமை; துவன்றல்- நிறைவு; முரஞ்சல்- முதிர்வு; பொற்பு- பொலிவு; வறிது-
சிறிது; எய்யாமை- அறியாமை; நன்று-பெரிது; தெவு-கொள்ளதல் தெவ்வு-
பகை; கழுமம்- மயக்கம், திரட்சி; கருவி-தொகுதி; கமம்-நிறைவு; அரி-ஐம்மை;
கவவு-அகத்திடுதல்; கவர்வு- விருப்பம், கைக்கொள்ளுதல்; சேர்-திரட்சி;
வியல்-அகலம்; வய-வேட்கைப்பெருக்கம்; புனிறு-ஈன்றணிமை; யாண்- கவின்;
ஐ- வியப்பு; முனைவு- முனிவு; வை-கூர்மை; எறுழ்- வலி; இருமை- கருமை,
பெருமை; பசப்பு- நிறன்; சாயல்- மென்மை; வெம்மை- விரும்புதல்; வாள்-
ஒளிமுதலியன பலவும் கொள்ளப்படும் என்பது.

11

291.

ஒரு சொற்குப் பொருளாக ஒரு சொல் கூறின் அதற்கும் பொருள் வினவின், அவ்வாராய்ச்சி வரம்பின்றி ஒடும் என்பது

12

292.

சொல்லுவான் நன்கு விளக்கினால், சொற்பொருள் திரிபின்றிப் புலனாகும்
என்பது

13

293.

சொற்பொருள் உணர்தற்குக் கேட்பான் மாட்டும் அறிவுஉணர்ச்சி இருத்தல்
வேண்டும்என்பது

14