294. | தொன்று தொட்டுப் பொருள் விளக்கிவரும்சொற்களுக்கு அப்பொருள் அமைந்ததன் அடிப்படையை ஆராய்ந்து எளிதில் அறிந்துகொள்ளமுடியாது என்பது |
15 |
பொதுவியல் |
295. | திணைபால் இடம் பொழுது வினா விடை மரபுஆகிய ஏழும் வழுவுதல் தவிர்க்க என்பது |
1 |
296. | திணைமயக்குற்ற ஐயக்கிளவியையும் பால் மயக்குற்ற ஐயக்கிளவியையும் உருவு என்ற சொற்கொண்டும் பன்மைப் பெயர் கொண்டும் பால்பகாஅஃறிணைப் பெயர்கொண்டும் முடித்துவினவுதலும், துணிந்தவிடத்து அன்மைக்கிளவியை மறுக்கப்பட்ட பொருள்மேலும் துணியப்பட்ட பொருள் மேலும் வைத்துச்சொல்லுதலும்மரபு என்பது |
2 |
297. | உயர்திணையைத் தொடர்ந்து வரும் பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் பற்றிய பெயர்கள் உயர்திணை முடிபுபெறும் என்பதும் அல்லாக்கால் அஃறிணை முடிபேபெறும் என்பதும், கண்ணும் தோளும் முலையும் பிறவும் சினைவினை கொண்டு முடியின் பன்மைவினை கொண்டு முடியும் என்பதும் உயர்திணை முதல் வினைகொண்டு முடியின் அவ்வரையறை இன்று என்பதும்,அஃறிணை பன்மைச் சினைப்பெயர் ஒருமை முதல்வினை கொண்டு முடிதலும் வழுவன்று என்பதும் |
3 |
298. | திணை விரவி எண்ணப்படும் பெயர்கள் சிறப்பினாலும் மிகுதியானும் இழிபினானும் ஒரு திணைச் சொற்கொண்டே முடியும் என்பதும், தலைமைப் பொருட்கு உரிய வினையால் தலைமையில் பொருளும் முடியும் என்பதும் |
4 |