299. | உவப்பு உயர்வு சிறப்பு செறல் இழிப்பு என்ற காரணங்களாலும் சொல் நோக்கத்தானும் திணையும் பாலும் மயங்கி வரினும் வழுவாகா என்பதும், குடிமை ஆண்மை முதலிய சொற்கள் இருதிணை முடிபும் பெறும் என்பதும், காலம் உலகம் முதலிய சொற்கள் உயர்திணைப் பொருளை உணர்த்தினும் அஃறிணை முடிபே கொள்ளும் என்பதும், அவை ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவழியே உயர்திணை முடிபு கொள்ளும் என்பதும் |
5 |
300. | ஒருமைச்சொல் பன்மையையும் மன்மைச்சொல் ஒருமையையும் சுட்டலும், ஓரிடத்திற்குரிய சொல் பிறிதோர் இடம் தழுவுதலும், முன்னிலை சுட்டிய ஒருமைக்கிளவி ஆற்றுப்படை மருங்கின் பன்மையொடு முடிதலும், தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள் விரவி ஓர் இடச் சொல்லொடு முடிதலும் ஆகியன |
6 |
301. | தரல் வரல் கொடை செலவு என்ற நான்கு சொற்களும் ஈற்றான் அன்றிப் பகுதி வகையானேயே இடம் உணர்த்தும் என்பதும், தருதலும் வருதலும் தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய என்பதும், கொடையும் செலவும் படர்க்கை இடத்திற்கே உரிய என்பதும், கொடைச்சொல் படர்க்கை யாயினும் தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின்கண் தன்மைக்கண்ணும் வரும் என்பதும் |
7 |
302. | தொழில் நிகழ்ச்சிக்கு இடனாகும் காலம் இறப்பு நிகழ்வு எதிர்வு என மூவகைப்படும் என்பது |
8 |
303. | முக்காலத்திலும் ஒரு தன்மையாய் இருக்கும் பொருளை நிகழ்காலத்திற்கு உரிய செய்யும் என்னும் வாய்பாட்டான் சொல்லுக என்பது |
9 |