304. | விரைவு மிகுதி இயல்பு தெளிவு என்பன பற்றியும் வேறு பொருண்மை பற்றியும் மூன்று காலங்களும் மயங்கும் என்பதும், அவற்றுள் விரைவுபற்றி எதிர்வும் நிகழ்வும் இறப்பொடு மயங்கும் என்பதும், மிகுதிபற்றி இறப்பும் எதிர்வும் நிகழ்வொடு மயங்கும் என்பதும், தெளிவும் இயல்பும் பற்றி எதிர்வு இறப்போடும் நிகழ்வோடும் மயங்கும் என்பதும், விரைவு முதலிய பொருண்மை குறியாது இறப்பும் எதிர்வும் நிகழ்வும் மயங்கும் என்பதும், ‘மிக்கதன் மருங்கின் வினைச்சொல்’ எழுவாய் சுட்டிக் கூறாதவழி இறப்பானும் எதிர்வானும் கூறப்பெறாது நிகழ் காலத்தால் கூறப்படும் என்பதும் | 10 | 305. | வினாவாவது அறியலுறவை வெளிப்படுப்பது; அஃது அறியாமை ஐயம் அறிவு கொளல் கொடை ஏவல் என்ற பொருண்மைக்கண்வரும்; அவற்றுள் முதல் இரண்டும் வழாநிலை; ஏனைய நான்கும் வழுவமைதி என்பது | 11 | 306. | யாது எவன் என்ற இருசொற்களும் அறியாத பொருளை வினாவுமிடத்துத் தோன்றும் என்பது | 12 | 307. | யாது என்பது அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்த்தற்கும் பயன்படுத்தப்படும் என்பது | 13 | 308. | வினாயபொருளை அறிவுறுப்பது செப்பாகும்; அது செவ்வன் இறை, இறைபயப்பது என இருவகைத்து; அவற்றுள் இறைபயப்பது வினாதல், ஏவல், மறுத்தல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், நேர்தல், சொல்தொகுத்து இறுத்தல்- என எழுவகைப்படும் என்பது | 14 |
|
|
|