309. | செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் சினைக் கிளவிக்கும் முதற்கிளவிக்கும் உறழ்பொருளும் ஒப்புப் பொருளும் அவ்வப் பொருளுக்கு அவ்வப் பொருளேயாம் என்பது |
15 |
310. | சொற் சுருங்குதற் பொருட்டுத்தம்முழை இல்லாத பொருளை, அல்லதுஇல் என்னும் வாய்பாட்டான் இல்லைஎனல் உறின் அப்பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறியும், அப் பொருளையே கூறின் சுட்டிக்கூறியும் இல்லை என்று கூறுக என்பது |
16 |
311. | பொருளைச் சான்றோர் கூறிய நெறியான் அமைந்த சொல்லால் சொல்லுதலே மரபு என்பது |
17 |
312. | பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் ஆகிய அடைகள் சேர்ந்த மொழிகள் பெரும்பாலும் இனம் சுட்டியும், சிறுபான்மை இனம் சுட்டாமலும் வரும் என்பது |
18 |
313. | இயற்கைப்பொருளை இத்தன்மைத்து என்று கூறுக; செயற்கைப் பொருளை ஆக்கங்கொடுத்து கூறுக; ஆக்கம் காரணத்தை அடிப்படையாக கொண்டு தோன்றும்; ஆக்கச் சொல் காரணம் இன்றியும் வழக்கினுள் வரும்; செய்யுட்கண் விகாரத்தால் தொக்கு வரும் என்பது |
19 |
314. | அடை-சினை முதல் என்பன முறையே வருதலும் முதற் சொல் ஈரடை பெறுதலும் உலகவழக்கினுள்ளும், சினைச்சொல் இரண்டு அடைபெறுதலும் பிறவாறு மயங்கித் தொடர்தலும் செய்யுள் வழக்கினுள்ளும் நிகழும் என்பது |
20 |