326. | பெயரிடத்தும் வினையிடத்தும் செய்யுளில் னகர ளகர ரகர யகர மெய் ஈற்றில்வர, ஈற்றயலாக வரும் ஆகாரம் ஓகாரமாகும் என்பதும், சிறுபான்மை அகரம் ஓகாரமாகத்திரியும் என்பதும் |
32 |
327. | உருபுகளும் பெயரெச்சமும் வினையெச்சமும் எதிர் மறுத்து மொழியினும் தத்தம் பொருள் நிலையில் திரியா என வழுவமைத்தல் வேண்டும் என்பது |
33 |
328. | ‘உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி’ பொருள் செல் மருங்கு ஒரு சொல்லான் முடியும்; முற்றும் பெயரெச்சமும் ஒரு வாய்பாட்டான் அடுக்கிப் பொருள் செல் மருங்கு ஒரு பெயர்ச்சொல்லான் முடியும்; வினையெச்சம் ஒரு வாய்பாட்டானும் பலவாய்பாட்டானும் அடுக்கிப் பொருள் செல் மருங்கு ஒரு வினை கொண்டு முடியும்; முடிக்குஞ் சொல் ஒன்றனான் முடியாத வழி இவ்விதி பொருந்தாது என்பது |
34 |
329. | உருபு, முற்று, பெயரெச்சம், வினையெச்சம் இவற்றிற்கும் இவை கொண்டு முடியும் சொற்களுக்கும் இடையே பொருள் பொருத்தமுற வரும் பிறசொற்கள் இடைப்பிறவரல் எனப் பெயர் பெறும் என்பது |
35 |
330. | முடிக்குஞ் சொல்லாய்வரும் பெயர்களும் வினைகளும் முடிக்கப்படும் சொல்லாகி ஒரோ வழி முன்னும் வருதலும் உண்டு என்பது |
36 |
331. | உருபு ஏற்ற சொற்கள் உருபு மறைந்து வருங்கால் அவை இறுதிக்கண் வருவழி இரண்டாம் வேற்றுமைப் பொருளினும் ஏழாம் வேற்றுமைப் பொருளினுமே இறுதிக்கண் தொகும் என்பது |
37 |