332. | ஒருபாற்கு உரிய சொல்மேல் வைத்துக் கூறிய செய்தி ஏனைய பாற்கும் ஏற்க வருதல் வழக்கு நெறி என்பது | 38 | 333. | பொதுப் பெயர் பொதுவினை இவற்றின் பொதுவாகிய தன்மையை நீக்கி அவற்றை முடிக்கவரும் சிறப்புப் பெயர்களும் சிறப்பு வினைகளும் அவற்றைச்சிறப்புப் பெயர்வினை யாக்கும் என்பதும், நிகழூஉ நின்ற பால்வரை கிளவியின், அன்ன மரபின் மொழிவயினான, உயர் திணை ஒருமை தோன்றலும் உரித்து என்பதும், ஒருவர், நீயிர், நீ என்பன முன்னம் சேர்த்தி முறையின் உணரப்படும் என்பதும் | 39 | 334. | பெயரொடு பெயரும் பெயரொடு வினையும் வேற்றுமை முதலிய பொருள்களின்மேல் தம்மில் புணருமிடத்து வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மையும் மறையப் பிளவுபடாது ஒட்டி ஒருசொல் நீர்மையவாய்த் தம்மை முடிக்கும் சொற்களோடு முடியும் நிலையினவாதல் தொகை நிலைத்தொடரின் இலக்கணம் என்பதும் தொகையல்லாத் தொடர்மொழியும் சிறு பான்மை ஒருசொல் நீர்மையவாம் என்பதும் | 40 | 335. | வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி, எனத் தொகை அறுவகைப்படும் என்பது | 41 | 336. | வேற்றுமைத்தொகையாவது வேற்றுமை உருபு தொக்கவழியும் அவ்வுருபுதொடர்ப் பொருளைச் சிதையாமல் தெரிவிக்கும் என்பது | 42 | 337. | உவமத்தொகையாவது உவம உருபு தொக்க வழியும் உவமஉருபுதொடர்ப் பொருளைச் சிதையாமல் தெரிவிக்கும் இயல்பிற்று என்பது | 43 |
|
|
|