பக்கம் எண் :

நூலமைப்பு45

338.

வினைத்தொகையாவது முதல்நிலை வினை பிறி தொருசொல்லொடு தொக்க
தொகையாற்றலால் காலம் விளக்கும் இயல்பிற்று என்பது

44

339.

பண்புத்தொகையாவது வண்ணம் வடிவு அளவு சுவை முதலிய பொருள்களில்
முதல்மொழி அடைமொழியாகவும் பின்மொழி அடைகொளியாகவும் அமைய
‘இன்னது இது’ என்ற பொருண்மைக்கண் வரும் இயல்பிற்று என்பதும்,
இருபெயர் பண்புத்தொகைபோல ஒட்டி வருவன இருபெயரொட்டுப்
பண்புத்தொகையாம் என்பதும்

45

340.

அளவின் பெயர் - எண்ணியற்பெயர்- நிறைப் பெயர்- எண்ணின்பெயர் -
என்ற பொருள்களில் இருபெயரும் பல பெயரும் ‘உம்’ இடை ஒழிய ஒட்டி
ஒருசொல் நீர்மையவாய் வரும் இயல்பிற்று உம்மைத் தொகை என்பது

46

341.

வேற்றுமைத்தொகை - உவமத்தொகை- வினைத்தொகை- பண்புத்தொகை-
உம்மைத்தொகை என்ற ஐவகைத்தொகைகளின் புறத்தும் அன்மொழித்தொகை
தோன்றும் என்பது

47

342.

தொகைச்சொற்களின் பொருள் முன்மொழி, பின்மொழி பன்மொழி, புறமொழி
என்ற நான்கிடங்களுள் ஒன்று பற்றிச் சிறக்கும் என்பது

48

343.

உம்மைத்தொகை உயர்திணைக்கண் வருமாயின் பலர்பாற்சொற் போல ஈற்றான்
பன்மை உணர்த்தி நிற்கும் இயல்பிற்றாய்ப் பன்மைவினை கொண்டே முடியும்
என்பது

49