பக்கம் எண் :

நூலமைப்பு47

349.

அவற்றுள், பெயரெச்சம் வினையெச்சம் என்பனவற்று இயல்பும் முடிபும்
முற்கூறப்பட்டன என்பது

55

350.

எதிர்மறைஎச்சம் எதிர்மறைப்பொருளை உணர்த்தும் சொல்லைக்கொண்டு முடியும்; பிரிநிலை யெச்சம் பிரிக்கப்படாத பொருளை உணர்த்தும்
சொல்லைக்கொண்டு முடியும்; ஒழியிசையெச்சம் ஒழியிசைப் பொருளை
உணர்த்தும் சொல்லைக் கொண்டு முடியும்; உம்மையெச்சம் அவ்வேறுபாடு
இரண்டன்கண்ணும் தன்வினை உம்மையொடு தொடர்ந்த சொற்கு
முடிபாகக்கொண்டு முடியும்; எனவென் எச்சம் வினையைக்கொண்டு முடியும்;
ஏனைய சொல்லெச்சமும் இசையெச்சமும் குறிப்பெச்சமும் மேலவைபோல
முடியாது சொல்லுவான் குறிப்பான் எஞ்சி நின்ற பொருளை உணர்த்தும்
என்பது

56

351.

சொல்லெச்சமாவது ஒரே ஒரு சொல் அவாய் நிலையாய் எஞ்சி நிற்பதாகும் என்பது

57

352.

உம்மை எச்சத்தின்முன் எஞ்சு பொருட்கிளவி உம்மையில் சொல்லாயின்,
அஃது ஏற்கும்வினை இறந்த கால வினையாயினும் நிகழ்கால வினையாயினும்
உம்மையேற்ற சொல் எதிர்காலவினையைக் கொண்டு முடிதலும் உண்டு என்பது

58

353.

ஒரு தொழிலைச் செய்யாய் என்னும் மறையாகிய முன்னிலை வினைச்சொல் அத்தொழிலைச்செய் என்னும் உடன்பாடு வினைச்சொல் ஆதலும் உரித்து
என்பது

59