354. | சொல்லான் அன்றிச் சொல்லுவான் குறிப்பான் பொருள் உணரப்படும் சொற்களும் உள என்பது |
60 |
355. | ஒரு பொருளைக் குறிக்கப் பல பெயர்கள் வரினும் அவற்றைப் பயனற்றன என்று நீக்காது கொள்வர் என்பது |
61 |
356. | ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொற்கள் அப்பொருளைச் சிறப்பித்தலான் நீக்காது கொள்ளப்படும் என்பது |
62 |
357. | செயப்படுபொருளை எழுவாயைப் போலத் தொழிற்படச்சொல்லுதலும் செயப்படு பொருளை எழுவாயாகவே கூறுதலும், கருவியைக் கருத்தாவாகக் கூறுதலும், ஏவினானைக் கருத்தாவாகக் கூறுதலும் ஆகிய கருமக்கருத்தன், கருவிக் கருத்தன், ஏவற்கருத்தன் என்பன வழக்கின் கண் இயலும் மரபுபற்றி அமைந்தனவாம் என்பது |
63 |
358. | முன்னிலை ஏவல் வினைச்சொல் ஈகாரமும் ஏகாரமும் முன்னிலைச் சொற்கு ஏற்றமெய் ஊர்ந்து வரும் என்பது |
64 |
359. | இடைச்சொற்கள் யாவும் வேறுபடுக்கும் சொற்களாகிய அடைமொழிகளே; வேறுபடுக்கப்படும் சொற்களாகிய அடைகொளிகள் அல்ல என்பது |
65 |
360. | உரிச்சொற்களில் அடைமொழிகளும் உள அடை கொளிகளும் உள என்பது |
66 |
361. | பொருள்கோள், யாற்றுநீர் - மொழிமாற்று - நிரல்நிறை - விற்பூட்டு - தாப்பிசை - அளைமறிபாப்பு கொண்டுகூட்டு - அடிமறிமாற்று என்ற எட்டு வகைத்தாம் என்பது |
67 |