362. | ஏனைய அடிகளை நோக்காது அடிதொறும் பொருள் முடிபு பெற்று வருவது யாற்றுநீர்ப் பொருள்கோளாம் என்பது |
68 |
363. | தாம் குறித்த பொருளிற்குப் பொருந்திய மொழிகளை ஓரடியுள்ளே மாற்றிச்சொல்லுதல் மொழிமாற்றுப் பொருள் கோளாம் என்பது |
69 |
364. | பெயரும் வினையும் ஆகிய முடிக்கப்படும் சொற்களையும் அவற்றை முடிக்கும் சொற்களையும் வேறு வேறு நிரல்பட நிறுத்தி, முறையாகவும் எதிராகவும் முடிக்கும் பொருள்கோள் நிரல் நிறை என்பது |
70 |
365. | செய்யுளில் முதல் சொல்லும் ஈற்றுச் சொல்லும் தம்மில் பொருள்பொருத்தமுற இணையுமாறு அமைவது பூட்டு வில் பொருள்கோள் என்பது |
71 |
366. | செய்யுளின் இடைநின்ற சொல் முதலினும் ஈற்றினும் இடைநிலைவிளக்கணிபடச் சென்று பொருள் பொருந்தி நிற்பது தாப்பிசைப்பொருள்கோள் என்பது |
72 |
367. | செய்யுளின் இறுதி நின்ற சொல்லோ சொற்றொடரோ இடையினும் முதலினும் சென்று இயைந்து பொருள்கொள்ள நிற்பது அளைமறி பாப்புப்பொருள்கோள் என்பது |
73 |
368. | செய்யுளின் பல அடிகளினும் நின்ற சொற்கள் முன்னும் பின்னுமாகக் கூடிப் பொருள் இயைய நிற்பது கொண்டுகூட்டுப்பொருள்கோள் என்பது |
74 |