369. | அடிகளைச் சீர்நிலை மாற்றாது முதல் இடை இறுதியடிகளாக மாற்றினும் பொருள் மாறாது அமையும் பொருள்கோள் அடிமறிமாற்றுப் பொருள்கோள் என்பதும், இதன்கண் ‘ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரிபும் தோற்றமும்’ கொள்ளப்படும் என்பதும் | 75 | 370. | ஒருதிணைப்பெயர் ஒருதிணைக்காய் வருவது, திசைச்சொற்களும் திசைபற்றி வரும் பெயர்களும் வாய்பாடு திரிந்தும் திரியாமலும் முறையே வருவன, செய்யுளில் இயையாதன இயைந்தனவாய் வருவன, பிசிச்செய்யுட்கண் திணைதிரிந்து வருவன, மந்திரப்பொருள்வயின் அதற்குரிய அல்லாத சொற்களாய் வருவன, ஆகியவற்றிற்கு இலக்கண வரம்பு இன்று என்பது | 76 | 371. | கால மாறுபாட்டான் பழையனவற்றுள் சில கழித்துப் புதியனவற்றுள் சில புகுத்துதல் வழுவன்று என்பது | 77 | 372. | ஒவ்வொரு சொல்பற்றியும் ஆராய்ச்சி செய்யின் அவ்வாராய்ச்சி முடிபு இன்றாய் இருக்கும் ஆதலின், கூறியன கொண்டு கூறாதனவற்றையும் கொள்ளுதல் அறிவாளிகளின் கடன் என்னும் அதிகாரப்புறனடை இது என்பது | 78 |
|
|
|