175 | பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானு மீரெழுத் தானு மியைவன வடசொல் | 274 |
| |
177 | அவற்றுள் கிளையெண் குழூஉ முதற் பல்பொரு டிணைதே மூர்வா னகன்புறன் முதல நிலன்யாண் டிருது மதிநா ளாதிக் காலந் தோள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குண மோத லீத லாதிப் பல்வினை யிவற்றொடு சுட்டு வினாப்பிற மற்றை யுற்றனவ் வீறு நம்பி யாடூஉ விடலை கோவேள் குரிசி றோன்ற லின்னன வாண்பெய ராகு மென்ப | 276 |
| |
178. | கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள் ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவுந் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே | 277 |
| |
179. | கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவுங் கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி யாகும் | 278 |
| |
181 | முன்ன ரவ்வொடு வருவை யவ்வுஞ் சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியு மொன்ற லெண்ணு முள்ள வில்ல பல்ல சில்ல வுளவில பலசில என்பவும் பிறவும் பலவின் பெயரே | 280 |
| |
182 | பால்பகா அஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய | 281 |