183. | முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்குஞ் சினைமுதற் பெயரொரு நான்குமுறை யிரண்டுந் தன்மை நான்கு முன்னிலை யைந்து மெல்லாந் தாந்தா னின்னவும் பொதுப்பெயர் | 282 |
| |
184. | ஆண்மை பெண்மை யொருமை பன்மையி னாமந் நான்மைக ளாண்பெண் ணவற்றான் முறைப்பெய ரிரண்டா மென்மனார் புலவர் | 283 |
| |
187. | தன்மை யானான் யாநா முன்னிலை எல்லீரும் நீயிர் நீவிர் நீர் நீ யல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது | 285 |
| |
188 | வினையின் பெயரே படர்க்கை வினையா லணையும் பெயரே யாண்டு மாகும் | 286 |
| |
189 | தான்யா னானீ யொருமை பன்மைதாம் யாம்நா மெலாமெலீர் நீயிர்நீர் நீவிர் | 287 |
| |
190 | ஒருவன் ஒருத்திப் பெயர்மே லெண்ணில | 288 |
| |
191 | ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப் பன்மையொடு முடியும் பாங்கிற் றென்ப | 289 |
| |
192 | பொருள்முத லாறோ டளவைசொற் றானி காரணங் காரியங் கருத்த னாதியு ளொன்றன் பெயரா னதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன வாகு பெயரே | 290 |
| |
194 | பெயரே ஐ ஆல் குஇன் அதுகண் விளியென் றாகு மவற்றின் பெயர்முறை | 292 |
| |
195 | ஆற னுருபு மேற்குமவ் வுருபே | 293 |
| |
197 | நீயிர் நீவிர்நா னெழுவா யலபெறா | 294 |