210 | ளஃகா னுயர்பெயர்க் களபய னீட்சி யிறுதி ளகரம் யவ்வொற் றாத லயலி லகரே யாதலும் விளித்தனு | 308 |
| |
211 | ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றய லகர மிஈ யாதலாண் டையா வீயாத லதனோ டேயுற வீற்றே மிக்கயல் யாக்கெட் டதனய னீட லீற்றி னோவுற லிவையுமீண் டுருபே | 309 |
| |
212 | லகாரவீற் றுயர்பெயர்க் கயனீ டுதலும் யகார வீற்றிற் களபுமா முருபே | 310 |
| |
213 | னவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்க ணிறுதி யழிவத னோடய னீட்சி | 311 |
| |
214 | லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க ணீற்றய னீட்சியு முருபா கும்மே | 312 |
| |
215 | அண்மையி னியல்புமீ றழிவுஞ் சேய்மையி னளவும் புலம்பி னோவு மாகும் | 313 |
| |
222 | முதலிவை சினையிவை யெனவே றுளவில வுரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும் | 316 |
| |
223 | ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகு மாகா வஃறிணைக் கானல் லாதன | 318 |
| |
224 | எல்லை யின்னு மதுவும் பெயர்கொளு மல்ல வினைகொளு நான்கே ழிருமையும் புல்லும் பெரும்பாலு மென்மனார் புலவர் | 319 |
| |
229 | அவைதாம் முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி யொன்றற் குரியவும் பொதுவு மாகும் | 322 |