பக்கம் எண் :

நூலமைப்பு9

நூற்பாக்களையும் சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரைத்த உரைகளையும் தழுவி
விளக்கப்பட்டுள்ளன.

உயர்திணையைத் தொடர்ந்த பொருள்முதல் ஆறும் உயர்திணை முடிபைக்
கொண்டும் முடியும் என்ற திணைவழுவமைதி பேசப்படுகிறது. அந்நூற்பாவுரையுள்
கண்ணுந் தோளும் முலையும் முதலியவற்றின் முடிபும் கூறப்படுகிறது.

பின், திணைவிரவுஎண்ணுப்பெயர் சிறப்பினும் மிகவினும் இழிபினும் ஒருதிணை
முடிபு எய்துமாறு நவிலப்படுகிறது.

பின், உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் திணைபால் இழுக்குதல்
குறிப்பிடப்படுகிறது. உரையில் ‘குடிமை ஆண்மை’ முதலிய சொல்முடிபும், ‘காலம்
உலகம்’ முதலிய சொல்முடிபும் இடம் பெறுகின்றன. பின், பன்மை ஒருமை மயக்கமும்
இடமயக்கமும் பேசப்படுகின்றன. ஆற் றுப்படையில் முன்னிலை ஒருமைச்சொல்
பன்மையொடுமுடியும் வழுவமைதியும் உரையில் குறிப்பிடப்படுகிறது. தருசொல்
வருசொல் கொடைச்சொல் செலவுச்சொல் என்ற நான்கும் ஈற்றானன்றி முதனிலை
வகையான் இடவுரிமை பெறுமாறு குறிப்பிடப்படுகிறது. ‘கொடுஎன் கிளவி படர்க்கை
யாயினும்-தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின்-தன்னிடத்து இயலுமாறு உரையில்
கொள்ளப்பட்டுள்ளது.

வினைக்கு இடமாகிய காலத்தின் முத்திறக்கூறுபாடுகளும், முக்காலத்தும்
ஒத்தியல்பொருளை நிகழ்காலத்தால் சொல்லுதலும், விரைவு முதலியவற்றால்
காலமயக்கம் ஏற்படுதலும், இறப்பும், எதிர்வும் பெரும்பான்மையும் மயங்குதலும்,
ஏனைக்காலங்களும் சிறுபான்மை மயங்குதலும், ‘மிக்கதன் மருங்கின் வினைச்சொல்’