‘பற்றோடு வீடே இருபுறம் தான்தெரி தான்தெரியா நற்கருத் தாதீ பகமாம் கருமம்; நான்கு ஆதாரம்மேல் பொற்புஅமர் சேர்வு கலப்புப் புலனொடு அயல் என்பதாம் கற்பு மலியும் இருபத்து மூவகைக் காரகமே’ 41
என்ற காரிகைகளையும் நோக்கி யுணர்க. |
சூறாவளி |
குழையான் என்றவழிக் கருதுதல் தொழிலும் கருத்தாவும் கருதப்பட்ட குழைபும் பிறவும் பற்றி அக்கருத்து நிகழ்ந்தது என்றார். அது பொருந்தாமை மேலே கூறினாம், வினைக்குறிப்பின்உண்மை அறியாமையின் இவ்வாறு தமக்கு வேண்டியவாறே கூறினார். |
அமைதி |
குழையான்- குழையை உடையன் எனக்கருதுதல் உடையான் என்று பொருள் கோடற்கண் இழுக்கின்மை முன்னர் விளக்கப்பட்டது. |
ஒத்த நூற்பாக்கள் |
| முழுதும் | இ தொல்.சொல்.112,113 |
| ‘மேதகு நற்றொழில் செய்வான் கருத்தா; வியன் கருவி தீதில் கரணம்; செயப்பட்ட தாகும் திறல்கருமம்; யாதலின் நீங்கும் அவதிய தாம்; இடம் ஆதாரமாம் கோதறு கோளிமன் கொள்பவ னாகும் கொடியிடையே.’ | வீ.சோ.38 |
| ‘செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே.’ | நன். 320 |
| பெயரியல் விளக்கம் முற்றும். | |