என்பது சூத்திரம். நிறுத்த முறையானே வினைஇலக்கணம் உணர்த்தினமையின் இவ்வோத்து வினையியல் என்னும் பெயர்த்து. இதனுள் இத்தலைச் சூத்திரம் வினைச் சொற்கு எல்லாம் பொது இலக்கணம் உணர்த்துகின்றது. இ-ள்: மேல் கூறிப்போந்த வினைச்சொல் என்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது ஆராயுங்கால் காலத்தொடு கூடப்புலப்பட்டுப் பொருளது புடைபெயர்ச்சியை விளக்குவதாம் என்றவாறு. ஈண்டு வேற்றுமை என்றது உருபை. எ-டு உண்டனன்- உண்ணா நின்றனன்- உண்பன்- எனவும், பண்டு கரியனாய் இருதனன்- இப்பொழுது கரியனாய் இருக்கின்றனன்- நாளைக்கரியனாய் இருப்பன்- எனவும் வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றிப் பொருளது புடைபெயர்ச்சியை விளக்கியவாறு காண்க. ‘வேற்றுமை கொள்ளாது’ என்னாது காலமொடு தோன்றி’ என்னின் தொழிற் பெயரும், ‘காலமொடு தோன்றி’ என்னாது ‘வேற்றுமை கொள்ளாது’ எனின் இடைச் சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல் ஆவான் சொல்லும் ஆகலான் அவற்றை நீக்குதற்கும், அவாய்நிலை தோன்றியவழித் தோன்றும் ஏனைக்காரகங்கள் போலாது காலம் உடன் தோன்றும் என்பது அறிவித்தற்கும் வினைச்சொல்லுள் காலம் வெளிப்பட விளக்காதனவும் உள, அவையும் ஆராயுங்கால் காலம் குறிப்பால் விளக்கு தலை உடைய என்றற்கும் ‘வேற்றுமை கொள்ளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றி’ என்றார் என்க. |