பக்கம் எண் :

444 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வரலாறு: கறுப்ப சிவப்பு- என்பன போல்வன பெயர்ப்போலி. உறு- தவ- என்பன போல்வன வினைப்போலி, துவைத்தல்- சிலைத்தல்- என்பன போல்வன பெயர்க்கு முதல்நிலை ஆயின.

துவைக்கும்- சிலைக்கும்- என்பன போல்வன வினைக்கு முதல்நிலை ஆயின. உறுபுகழ்- நனிபேதை- என்பன போல்வன பெயர்முன் நின்றன. நனி சொற்றான்-
தவச்சென்றான்- என்பன போல்வன வினைமுன் நின்றன.
 

  ‘திரிகாய் விடத்தரொடு காருடைபோகி’

பதிற்.13

  ‘கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்’ நெடுநல்.18

என்பன போல்வன பெயர்ப்பின் நின்றன.
 
  ‘மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்’ அகம்.22
  வெயில்புறம் தரூஉம் இன்னல் இயக்கத்து’ மலைபடு.374

என்பன போல்வன வினைப்பின் நின்றன.

உறு- தவ- என்பன போல்வன பலசொல் ஒருபொருட்கு உரிய ஆயின. கடி-
நளி- என்பன போல்வன ஒருசொல் பலபொருட்கு உரிய ஆயின. பிறவும் அன்ன.
பொருட்கு உரியவாகிய குறிப்பு முதலியவற்றை உணர்த்தி நிற்றலின் உரிச்சொல்
ஆயிற்று. இவ்வாறு அன்றிப் பெரும்பாலும் செய்யுட்கு உரித்தாய் வருதலின் உரிச்சொல்
ஆயிற்று என்பாரும் உளர். 1
 

விளக்கம்
 

  நிறுத்தமுறை-
‘அதுவே இயற்சொல் திரிசொல்’
(171)

என்ற நூற்பாவில் நிறுத்தமுறை.

குறிப்பு இசை பண்பு என்பனவற்றிற்கு உரிமையுடையவாய்ப் பெரும்பாலும்
செய்யுட்கே உரிய ஆதலின் உரிச்சொல் ஆயின.