உரிச்சொல் இலக்கணம் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உரிச்சொல் பெயர்பற்றியும் வினைபற்றியும் வருமிடத்து ஒரு சொல் பல் பொருட்கு உரிமைப்படடுத் தடுமாறுதலும் பலசொல் ஒரு பொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும் உரிச்சொல் இலக்கணமாம்.” தொல்.சொல். 292 உரையாசிரியர். “உரச்சொல் என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டால் சொல்லப்படும் பொருட்குத்தானும் உரித்தாகிவருவது அதனானேயன்றே ‘ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்- பலசொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும், என ஓதுவாராயினர். எழுத்ததிகாரத்துள் இதனைக் ‘குறைச்சொல் கிளவி’ என்று ஓதினமையால் (482) வடநூலாசிரியர் தாது என்று குறிப்பிட்ட சொற்களே இவைஎன்று கொள்ளப்படும். அவையும் குறைச்சொல் ஆதலான்.” |