பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-2451

  ‘கதழ்பரி நெடுந்தேர்’
 
எனவும்,
 
  ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்’ அகம்.9
எனவும், கதழ்வும் துனைவும் ஆகிய இரண்டும் விரைவு என்னும் குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘அதிர வருவதோர் நோய்’ குறள்.429
எனவும்,
 
  ‘விதுப்புறல் அறியா ஏமக்காப்பினை’ புறம்.20
எனவும் அதிர்வும் விதுப்பும் ஆகிய இரண்டும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘கெடவரல் ஆயமொடு’
 
எனவும்,
 
  ‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்’ தொல்.சொல்.249
எனவும், கெடவரலும் பண்ணையும் விளையாட்டுக்கருத்தாகிய குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி’ அகம்.198
எனவும்,
 
  ‘பேரிசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுள்’
மலைபடு.82, 83
எனவும், நம்பும் மேவும் ஆகிய இரண்டும் நசை என்னும் குறிப்பினை உடைய ஆதலும்
 
  ‘வேனில் உழந்த வறிதுஉயங்கு ஓய்களிறு’ கலி.7
எனவும்,
 
  ‘பாய்ந்து ஆய்ந்த தானை’ கலி.96-2
எனவும்,
 
  ‘நிழத்த யானை மேய்புலம் படர’ மதுரைக். 303
எனவும்,
 
  ‘கயல் அறல் எதிரக் கடும்புனல் சாஅய்’ நெடுநல். 18