எனவும், ஓய்தலும் ஆய்தலும் நிழத்தலும் சாய்தலும் ஆகிய நான்கு உரிச்சொற்களும் முன் நுணுகாது உள்ளதுஒன்று நுணுகுதல் குறிப்பினை அறிய உணர்த்தலும், |
| ‘அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும்’ | |
எனவும், |
| ‘அமரர்ப் பேணியும் ஆகுதி அருத்தியும்’ | புறம்.99 |
எனவும், பிணையும் பேணும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் பெட்பின் பொருளாகிய புறந்தருதல் என்னும் குறிப்பினை உடைய ஆதலும், |
| ‘பையுள் மாலைப் பழுமரம் படரிய’ | நச்.உரை.மேற். |
எனவும், |
| ‘சிறுமை உறுபவோ செய்யுஅறி யலரே’ | நற்.1 |
எனவும் பையுளும் சிறுமையும் ஆகிய இரண்டும் நோய் என்னும் குறிப்பு உணர்த்தலும், |
| ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ | புறம்.53 |
எனவும், |
| ‘உறந்த இஞ்சி உயர்நிலை மாடத்து’ | |
எனவும், வெறுப்பும் உறப்பும் ஆகிய இரண்டும் செறிவு என்னும் குறிப்பினை உணர்த்தலும், |
| ‘இலம்படு நாணுத்தரும்’ | சிலப்.9-71 |
எனவும், |
| ‘ஒக்கல் ஒற்கம் சொலிய’ | புறம்.327 |
எனவும் இலம்பாடும் ஒற்கமும் ஆகிய இரண்டும் வறுமை என்னும் குறிப்பினை உணர்த்தலும், |