பக்கம் எண் :

454 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இலம் என்னும் உரிச்சொல் பெரும்பான்மையும் படு என்னும் தொழில் பற்றி
அல்லது வாராமையின் ‘இலம்பாடு’ என்றார்.


விளக்கம்
 

குறிப்பு, பண்பு இசை எனக்கொண்ட பாகுபாட்டுள் ஒவ்வொன்றிலும் ஒரு பொருள்
உணர்த்தும் பல உரிச்சொற்கள் பல பொருள் உணர்த்தும் ஒவ்வோர் உரிச்சொல்
ஆவன என்பனவற்றைத் தொல்காப்பியத்திலிருந்து பகுத்து எடுத்து, அவ்வரையறையுள்
அடங்காதனவற்றைப்புறனடை நூற்பா உரையில் சுட்டுவான் உளங்கொண்டு, ஆசிரியர்
இந்நூற்பாவில் ஒரே பொருள் பற்றிவரும் பலவாகிய குறிப்புப் பொருண்மையுடைய
உரிச்சொற்களைச் சுட்டியுள்ளார்.


ஒத்த நூற்பாக்கள்
 

  ‘உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப.’
தொ.சொ. 299, மு.வீ.ஒ.21
  ‘செல்லல் இன்னல் இன்னா மையே.’ 302.29
  ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி’. 310.34
  ‘மழவும் குழவும் இளமைப் பொருள.’ 311,35
  ‘கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்.’ 314,37
  ‘கதழ்வும் துனைவும் விரைவின் பொருள.’ 315
  ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்.’ 316,38
  ‘கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு.’ 319
  ‘நம்பும் மேவும் நசையா கும்மே.’ 329
  ‘ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.’
339