பக்கம் எண் :

486 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உயிர் எத்தன்மைத்து என வினாவும்,

உணர்தல் தன்மைத்து என இறையும்,

யானை மேய்ப்பான் பகான்- யாடு மேய்ப்பான் இடையன்- என மரபும் வழுவாமல் தத்தம் மரபினால் வந்தவாறு காண்க.

‘வழாஅல் ஓம்பல்’ எனவே வழுவுதலும் உண்டு என்பதூஉம், அவ்வழு
அமைக்கப்படாது என்பதூஉம், அவ்வழுவும்,

அவன் உண்டது- அவன் உண்டன- அவள் உண்டது- அவள் உண்டன- அவர்
உண்டது- அவர் உண்டன- அது உண்டான்- அவை உண்டான்- அது உண்டாள்- அவை உண்டாள்- அது உண்டார்- அவை உண்டார்- எனவும்,

உண்டான் அது- உண்டான் அவை- உண்டாள் அது- உண்டாள் அவை-
உண்டார் அது- உண்டார் அவை- உண்டதுஅவன்- உண்டதுஅவள்- உண்டனஅவள்-
உண்டதுஅவர்- உண்டனஅவர்- எனவும் ஒருதிணைச் சொல் ஏணைத்திணைச்
சொல்லொடு முடிந்த திணைவழுவும்,

அவன் உண்டாள்- அவன் உண்டார்- அவள்உண்டார்- அவர் உண்டான்- அவர்
உண்டாள்- அது உண்டன- அவை உண்டது- எனவும், உண்டான் அவள்- உண்டான்
அவர்- உண்டாள் அவன்- உண்டாள் அவர்- உண்டார் அவன்- உண்டார் அவள்-
உண்டதுஅவை- உண்டனஅது- எனவும் ஒருபாற்சொல்’ அத்திணைக்கண் ஏனைப்பாற்
சொல்லொடு முடியும் பால் வழுவும்,

யான் உண்டான்- யான் உண்டாய்- உண்டான் யான்- உண்டாய் யான்-
என்பனபோல ஓர் இடச்சொல் ஓர் இடச்சொல்லொடு முடியும் இடவழுவும்,