உணர்த்தலும் உடைமையான் அன்றே 407 ஆவது குறளில் ‘மண்மாண் புனைபாவை அற்று’ என்னும் இடத்துப் பாவை என்பதற்குப் பாவையுடைய எழுச்சியும் அழகும் போலுமென உரைகூறி ஆண்டு ஆகுபெயரென இலக்கணம் கூறினார் என்பது. அற்றேல், பதவுரையில் ஆகுபெயர்ப் பொருளைக் கூறாது கனவிய குழையினை உடையாள் என அன்மொழித்தொகைப் பொருளையே கூறினமை என்னையோஎனின், ஆகுபெயர்ப் பொருளைப் பதவுரையுள் கூறின் இக்கனவிய குழையினை உடையாளது உருவம் முதலியன அணங்கு கொல், சாயல் முதலியன ஆய்மயில்கொல், நோக்கம் முதலியன மாதர் கொல் எனச்சொற் பல்கலானும், ‘தலைமகள் உருபு முதலியன முன்கண்டறி அளவன்றிச் சிறந்தமையான் அவளைத் தலைமகன் ஐயுற்றுது’ எனக் கருத்துரையுள்ளும், எழுதலாகா உருபும் தன் வருத்தமும் பற்றி அணங்குகொல் என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி ஆய்மயில் கொல் என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி மாதர்கொல் என்றும் கூறினான்’ என விசேடவுரையுள்ளும் கூறுதலானே ஆகுபெயர்ப் பொருள் செவ்வனே அறியக் கிடத்தலானும், இவ்வாறே 509 ஆம் குறளில் தேறும் பொருள் என்பதற்குப் பதவுரையுள் ஆகுபெயர்ப் பொருளைக் கூறாது தெளியும் பொருள் என இயற்பெயர்ப் பொருளையே கூறி, விசேடவுரையில் ‘தேறும் பொருள் என்பது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை; பொருள்- ஆகுபெயர்’ எனக் கூறுமாற்றானும், ஈண்டும் கனங்குழை என்னும் அன்மொழித் தொகையை இயற்பெயராகக் கொண்டு அவ்வியற்பெயர்ப் பொருளைப் பதவுரையுள் கூறிக் கருத்துரையினும் விசேடவுரையினும் ஆகுபெயர்ப் பொருளை விளக்கினார் என்பது. இங்ஙனம் இவரது கருத்தை முன்பின் பாராது ஆகுபெயர்க்கும் அன்மொழித்தொகைக்கும் வேறுபாடு உணராது |