பக்கம் எண் :

12 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

மயங்கிக் கனங்குழை என்னும் அன்மொழித்தொகையே ஆகுபெயர் எனக் கூறுதல்
எவ்வாற்றானும் பொருந்தாமை 1098 ஆவது குறளில் ‘அசையியற்கு உண்டுஆண்டுஒர்
ஏஎர்’ என்னுமிடத்தும், 1275 ஆவது குறளில் ‘செறிதொடி செய்து இறந்த கள்ளம்’
என்னுமிடத்தும் ஏர்- கள்ளம்- என்பனவற்றை ஆகுபெயர் என்று எழுதி, அசையியல்-
செறிதொடி- என்பனவற்றை அன்மொழித்தொகை எனத் தாமே விளங்கும் எனக்கருதி
ஒன்றும் எழுதாது விட்டமையானே நன்கு விளங்கும் என்பது.

அற்றன்று; 380ஆம் குறளில் பெருவலி- 735 ஆவது குறளில் உட்பகை- 1034
ஆவது குறளில் குடைநிழல்- 1058 ஆவது குறளில் ஈர்ங்கண்மாஞாலம்- 1255ஆவது
குறளில் பெருந்தகைமை- என்னும் இவற்றை அன்மொழித்தொகை என்னாது ஆகுபெயர்
என்றமையானே வேறுபாடு உணரார் எனக் கூறுதும் எனின், பெருவலி முதலியவற்றுள்
வலி முதலிய பின்மொழியே ஆகுபெயராகி நிற்றலின் அவை எல்லாம்
அன்மொழித்தொகை ஆகா என்று உணர்க.

இது போலவே இப்பேரறிவாளரது நுண்ணியவுரையை முன்பின் பார்த்து அமையாது
பிரயோகவிவேகநூலார் முதலியோர் இல்வாழ்வான் என்பான்’ முதலிய பல இடத்தும்
குற்றம் கூறினார்,
 

ஒரு சூத்திரப்பொருள்
 

தொல்காப்பியம் சொல்லதிகாரம் (418) எச்சவியல் சூத்திரம்,

‘பண்புத்தொக வரூஉம் கிளவி யானும்
உம்மை தொக்க பெயர்வயி னானும்
வேற்றுமை தொக்க பெயர்வயி னானும்
ஈற்றும்நின்று இயலும் அன்மொழித் தொகையே’