என்பது. அதற்குச் சேனாவரையர் உரையுள் ஆராய்ச்சிக்கு வேண்டுவ ஈண்டு எழுதப்படும். அவை யாவையோ எனின்,இ-ள்: பண்புச்சொல் தொகும் சொல்லினும், உம்மை தொக்க பெயர்க்கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச்சொற்கண் நின்று நடக்கும் அன்மொழித்தொகை என்றவாறு. பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் பெரும்பான்மை ஆகலின், முறையிற்கூறாது அதனை முற்கூறினார். வேற்றுமைத்தொகை நிலைக்களத்துப் பிறத்தலின் உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறத்தல் சிறுபான்மை ஆயினும் ஒருபயன் நோக்கி அதனை அதன்முன் வைத்தார். யாதோ பயன் எனின் சிறுபான்மை உவமைத்தொகை நிலைக்களத்தும் வினைத்தொகை நிலைக்களத்தும் அன்மொழித்தொகை பிறக்கும் என்பது உணர்த்துதல் என்க. அவ்வாறே இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உரை கூறினார். அக்கருத்தை ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகக்கொண்டு நன்னூலாரும் |