பக்கம் எண் :

அன்மொழித்தொகை ஆராய்ச்சி15

என்னும் சூத்திரம் முதலியவற்றுள்ளும் எல்லாம் விதந்து கூறாது சில கூறிச் சில
விடுத்தல் வேண்டும். அன்மொழித் தொகை நிற்கும் இடம் இத்துணைத்து என வரையறை
இன்மையான் அவ்வாறு கூறினார் எனின்,
 
 ‘வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின்என்று
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
இன்னது இதுஎன வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே’
 




தொல்.சொல்.416
 
என்றாற்போலச் சில கூறிக் கூறாதன எல்லாம் அடங்குமாறு பிற- ஏனைய- முதலிய
சொற்கொண்டு முடித்தல் வேண்டும்; அவ்வாறு இன்மையான் அதுவும் பொருந்தாது.

இனி, நன்னூலார் கூற்றும் அவ்வுரைகளைப் போன்றே நிரம்பா இலக்கணத்து
ஆதல் கூறுதும்:

ஐந்தொகையே அன்றிப் ‘பாயின மேகலை’- ‘வார் என்ற கூந்தல்’- ‘பொய்யா
மொழி’- ‘திருநுதல்’- ‘தடமுலை’- எனத் திருக்கோவையார் சிறுபஞ்சமூலம் திருக்குறள்
முதலிய செய்யுள்களிடத்துப் பெயரெச்சத் தொடரினும் உரிச்சொல் தொடரினும்
அன்மொழித்தொகை நிற்றல் காண்டும் ஆதலின், அவற்றையும் கூறாமை குன்றக்கூறலாம்அதுவன்றி ‘ஐந்தொகை மொழிமேல்’ எனப் பொதுப்படக் கூறலானே, நிலங்கடந்தான்
முதலிய வினையுடன் ஆகிய தொகைகளை விலக்காமையான் அவற்றின்கண்ணும்
அன்மொழி நிற்கும் எனப்பட்டு அதிவியாத்திக்குற்றம் தங்கும். அவை இன்னும் பல
குற்றத்துக்கு இடனாம் என்பது ஆசிரியர் கருத்தின்படி உரைக்குமிடத்து விளங்கும்
ஆசிரியர் எல்லா இலக்கணமம் குறைவின்றி ஆடி நிழலின் அறியத் தோன்றக்
கூறியிருப்பவும் அவர் கருத்து அறியாது தத்தமக்கு வேண்டியவாறே உரைகள்
கண்டமையானும், அவ்வுரைகளை ஆசிரியர் கருத்துஎன மயங்கிப் பிற்காலத்தார்
தத்தமக்கு வேண்டியவாறே நூல் செய்தார் ஆகலானும், இக்