பக்கம் எண் :

16 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

காலத்தாரும் உண்மை அறியாது தத்தமக்கு வேண்டியவாறே தொல்காப்பியனார் சொல்
பல்கச் சூத்திரம் செய்தார் என்றும், நன்னூலார் சொற்சுருங்கச் செய்தார் என்றும்,
அங்ஙனம் சுருங்கச் சொல்லினும் தொல்காப்பியனார் கூறாதன அடங்கின எனவும்
பிறவும் கூறுவார் ஆயினர்.

ஈண்டுக் கூறியனவற்றுள் பாயினமேகலை முதலியன அன்மொழித்தொகை ஆகா
என்றும், ஆகுபெயரே என்றும், அதனால் அன்மொழித்தொகை தொகாநிலைக்கண்
பிறத்தல் இல்லை என்றும் பிறர் கூறுப. பேராசிரியரும் பாயின மேகலை ஆகுபெயர்
என்றார். அவை எல்லாம் பொருந்தாமை பின்னர்க் கூறப்படும். இது நிற்க.

இனி, ஆசிரியர் கருத்து என்னையோ எனின், கூறுதும்.

‘பண்புதொக......................அன்மொழித்தொகை’

என்பது சூத்திரம். இச்சூதிரம் என்நுதலிற்றோ எனின், அன்மொழித்தொகையது
இலக்கணம் கூறுதல் நுதலிற்று.

பதவுரை- பண்புதொக வரூஉம் கிளவியானும்- (பண்புச்சொல் பண்புடைய
பொருளை உணர்த்துதலாகிய ஐம்பால் அறியும்) பண்பின் இயற்கை வெளிப்படாது
குறைந்து நிற்குமாறு வருகின்ற சொற்களின்கண்ணும்,

உம்மைதொக்க பெயர்வயினானும்- உம் என்னும் இடைச்சொல் குறைந்து நின்ற
பெயர்களாகிய சார்பின்கண்ணும்,

வேற்றுமை தொக்க பெயர்வயினானும்- வேற்றுமை உருபு குறைந்து நின்ற
பெயர்களாகிய சார்பின்கண்ணும்,

ஈற்றும்- ஏனைய தொகைநிலை தொகாநிலை என்னும் இருவகைச்
சொற்றொடர்களது ஈற்றின்கண் நின்ற பெயர்க் கண்ணும்,

நின்று இயலும் அன்மொழித்தொகை- அச்சொற்களை முதல்நிலையாகப் பற்றி
நின்று நடக்கும் அன்மொழித்தொகை என்றவாறு.