பண்பு அதன் இயற்கையையும் ஈறு அதன்கண் நின்ற பெயரையும் ஆகுபெயரான் உணர்த்தின உம்மையின் கண் ஐ சாரியை. வயின், சார்பு, பற்றுக்கோடு, இடம் என்பன ஒருபொருட்கிளவி ஆன் மூன்றும் ஏழாவதன் பொருட்கண் மயங்கின. ‘உம்மை தொக்க பெயர்’, ‘வேற்றுமை தொக்க பெயர்’ என முன்னர்க் கூறப்பட்டமையான் ‘ஈற்றும்’ என்பது ஈற்று நிற்கும் வினையை ஒழித்துப் பெயரை உணர்த்திற்று. ஈற்றேகாரம் அசைநிலை. பெயர்வயின் என்பது பெயராகிய வயின் என விரியும். வயின் இடப்பெயர்; உருபு அன்று. அன்மொழி தொகுதற்கு இடமாகிய சொல்தான் முதல்நிலையாகி இறுதி நிலையை ஏற்கும் இயல்பிற்றாதல் வேண்டும் என்பது. ‘நின்று இயலும் அன்மொழித் தொகையே’ எனக் கூறலான் பெறப்பட்டது. வெள்ளாடை முதலிய பண்புத்தொகையுள் வெண்மை என்னும் பண்புப்பெயர் வெளியது எனப் பண்புடைப் பொருளை உணர்த்துதல் ஆகிய ஐம்பால் அறியும் பண்பின் இயற்கை தொகுதற்கு வெளியதும் ஆடையும் ஆகிய அவ்விரு பெயரும் காரணமாக நிற்றலானும், தகர ஞாழல் முதலிய உம்மைத்தொகையுள் உம்மை தொகுதல் ஒரு பெயர்க்கண் அன்றி இரு பெயர்க்கண்ணும் ஆகலானும், பொற்றொடி முதலிய வேற்றுமைத்தொகையுள் வேற்றுமைஉருபு தொகுதல் ஒரு பெயர்க்கண் அன்றி இரு பெயர்க்கும் இடையே ஆதலின் அவ்வுருபு தொகுதற்கு ஒரு பெயரே இடம் ஆகாமல் இருபெயரும் இடமாகி நிற்றலானும் அம்மூன்று தொகையுள்ளும் அன்மொழித்தொகை இருபெயர்க்கண்ணும் அவற்றை முதல்நிலையாகப் பற்றி நின்று நடக்கும் என்பது கூறினார் ஆயிற்று. கடந்தான் நிலம், இருந்தான் குன்றம் முதலியவற்றுள் ஈற்றின்கண் உருபு தொகலான் ஆண்டு உபு தொகுதற்கு |