பக்கம் எண் :

18 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இடம் ஒரு பெயரே ஆகலானும், வேற்றுமை தொக்கபெயர் எனப் பொதுப்படக் கூறலான்
அன்மொழித்தொகை அந்நிலம் முதலிய ஒரு பெயர்க்கண்ணும் நின்று நடக்கும் எனப்
படலானும் அன்மொழித்தொகை எல்லாவேற்றுமைத் தொகையுள்ளும் இருபெயர்க்கண்
நிற்றல் அமையாதாம் பிற எனின், நிலம்-குன்றம்- முதலிய பெயர்கள் முதற்கண் நின்ற
கடந்தான்- இருந்தான் முதலிய சொற்களுக்குப் பயனிலையாகி நிற்றலான் அவை
முதல்நிலைஆகி இறுதிநிலை ஏற்பன ஆகாமையின் அப்பெயர்க்கண் நின்று அன்மொழி
நடவாது என்பது பெறப்படும்; ஆதலின் யாண்டும் அன்மொழித் தொகை வேற்றுமை
உருபு இடையேதொக்க இருபெயர்க் கண்ணே நின்று நடக்கும் என்பது.

உதாரணம்: வெள்ளாடை, அகரஈறு என்பன பண்புத்தொகை நிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித்தொகை. தகரஞாழல் என்பது உம்மைத்தொகை
நிலைக்களத்துப்பிறந்த அன்மொழித்தொகை. பொற்றொடி என்பது வேற்றுமைத் தொகை.
நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை.

இனி அவை வெளியது ஆகிய ஆடையை உடுத்தாள் என்னும் பொருள் படுமாறு
வெள்ளாடையாள் எனவும், அகரம் எனப்படுவது ஆகிய ஈற்றை உடைய சொல் எனப்
பொருள்படுமாறு அகர ஈற்றது எனவும், தகரமும் ஞாழலும் ஆகிய சாந்தினைப் பூசினாள்
எனப் பொருள்படுமாறு தகர ஞாழலாள் எனவும் பொன்னால் ஆகிய தொடியினைத்
தொட்டாள் எனப் பொருள்படுமாறு பொற்றொடியாள் எனவும் விரியும். அவற்றுள்
அன்மொழித்தொகை இருபெயரையும் பற்றி நின்றமை காண்க.

இனி, எல்லா அன்மொழித்தொகையும் இறுதிச்சொற் கண் நின்று நடக்கும் எனச்
சேனாவரையர் முதலாயினார் உரை கூறினாரால் எனின், அன்மொழித்தொகைக்கு
ஆடையாள், ஈற்றது, ஞாழலாள், தொடியாள் என இறுதிச்சொல் மாத்திரம் இடமாக
நில்லாமையானும், அதற்கு இரு பெயருமே