பக்கம் எண் :

2 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வற்றுள் ஒவ்வாதன உளவேல், கற்றறிந்தோர் கருணை செய்து அவற்றை எடுத்துக்காட்டி
உண்மை உணர்த்துவாராயின், அந்நன்றி என்றும் மறவாது போற்றற்பாலது ஒன்றேயாம்.

இனிக் கனங்குழை அன்மொழித்தொகையாயின் கனவிய குழையினை உடையாள்
என உயர்திணைப் பெண்பாலை உணர்த்தும் ஆதலின், அச்சொல் அணங்குகொல்
ஆய்மயில் கொல் மாதர்கொல் என இருதிணைப் பயனிலையும் கோடல் திணை வழுவாக
முடிதலின் அவ்வுரை பொருந்தாது என்பதே துணிவாயினும், திருக்கோவையாருள்,
 

 ‘இயமன் விடுத்த தூதோ அனங்கன் துணையோதில்லை
மாதோ மடமயிலோ எனநின்றவர்’
 


 

என இருதிணையும் மயங்கினாற் போலவே ஈண்டும் மயங்கலான் வழு ஆகாது எனின்,

 ‘முதலும் சினையும்என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய’
 

தொல்.பொருள்.281
என ஆசிரியர் தொல்காப்பியனாரும், அக்கருத்தை விளக்கி
 
 ‘உருவக உவமையின் திணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே’

 

நன்.410
என நன்னூலாரும் உருவகம் உவமை என்னும் அணி நோக்கி திணைபால் முதல்சினை
மயங்கல் வழு அன்று எனக் கூறினமையானும், அவ்விருவரும்
 
 ‘பால்மயக் குற்ற ஐயக் கிளவி’
‘உருவென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்’
‘ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்’
 
தொல்.சொல்.23
24
நன்.376