என்றல் தொடக்கத்துச் சூத்திரங்களான், பொருள் ஐயத்தின் ஐயுற்ற பொருளை எல்லாம் பொதுச்சொல் கொண்டு கித்தல் வேண்டும் எனவும் அவ்வாறின்றித் திணைபால் மயங்கக் கூறல் வழு எனவும் கூறினமையானும், இயமன் விடுத்த தூது முதலியன ஐயநிலை உவமைபற்றித் திணை மயங்கி வந்தமையான் ஆண்டு வழு ஆகாமையும், ஈண்டுப் பொருள் ஐயம் ஆதலின் அணங்குகொல் மயில்கொல் மாதர்கொல் என்னும் இருதிணை ஐயத்துக்குக் கனங்குழை அன்மொழித் தொகையாயின் பொதுச்சொல் ஆகாது உயர்திணைச் சொல்லாக முடிதலின் வழுவாதலும் உணரப்படும் என்பது.இனிக் கோவையாருள் தூது முதலியன உவமைஐயம் ஆகா; பொருள்ஐயமே, அச் செய்யுள் ஐயம் என்னும் அகப் பொருள் துறை யாதலான் எனின், அச்செய்யுளின்கண் போதே விசும்போ புனலோ பணிகளது பதியோ’ என்பனவே பொருள் ஐயமாக நிற்றலான் இயமன் விடுத்த தூது முதலியன உவமை ஐயமேயாம் இது, பேராசிரியர் ‘தூது முதலிய மூன்றும் பொருள்ஐயம் ஆகா; உவமையேயாம்’ என விளங்குமாறு ‘இயமன் தூதும் அனங்கன் துணையும் மடமயிலும் ஐயநிலை உவமைக்கண் உவமமாய் நின்றன’ எனவும் ‘தில்லை மாது உவமிக்கப்படும் பொருள்’ எனவும் முன்னர்க்கூறி, ‘அம்மூன்றும் உவமிக்கப்படும் பொருள் ஐயத்தின்கண் வாராது உவமை ஐயமாக இருத்தலான் திணைவழு ஆகாது என யாவரும் உணருமாறு விளக்கி, அம்மட்டோடு நிற்பின் நுண்ணுணர்வில்லார் ‘அகப்புறமாகிய கைக்கிளைப்பாற்பட்ட பொருளை ஐயுறுதலாகிய கோவைத்துறை அகச் செய்யுளகத்து வாராமை என்னையோ?’ என்று மயங்குபஎனக் கருதி அதனை விளக்கற்கு “வாழ்பதி போதோ விசும்போ புனலோ பணிகளது பதியோ’ எனப்பதியை ஐயுறுதலானே ஐயம் நிகழ்ந்தது, திருமகள் முதலாகிய தெய்வமோ மக்கள் உள்ளாளோ என்று என்க” எனவும், அவற்றுள்ளும் திருமகள் முதலிய தெய்வங்களின் பதிகளாகிய போது விசும்பு |